vanniyar.org

Saturday 18 August 2012

அண்ணாமலையாரே மகனாக இருந்து ஈமச்சடங்கு செய்த ,திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய வல்லாள மகாராஜனின் ஈமச்சடங்கு பற்றிய செய்தி


அண்ணாமலையாரே மகனாக இருந்து ஈமச்சடங்கு செய்த ,திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய வல்லாள மகாராஜனின் ஈமச்சடங்கு பற்றிய செய்தி :


சுமார் அறநூறு ஆண்டுக்கு முன்பு வல்லாள மகாராஜன் என்ற திருவண்ணாமலை ஆண்ட வன்னிய குல க்ஷத்ரிய மன்னன் ஒரு சிறந்த சிவன் பக்தன் . குழந்தை பேறு இல்லாமல் பல வருடம் துயரம் அடைந்த இவருக்கு , ஈசனே அருள்பாலித்து "பிள்ளைப்பேறு வேண்டி மனத்துயரம் அடைந்துள்ள பக்தனே , நீ மனம் கலங்க வேண்டாம் . இந்த பூலோகத்தில் உன் ஆயுள் முடிவடையும் போது யாமே உமக்கு புத்திரனாக இருந்து உன் ஈமக் காரியங்களை செய்து முடிப்போம் " என்ற ஆறுதல் வார்த்தை விண்ணில் கேட்டது .

மன்னனும் பட்டத்தரசியும் எல்லையில்லா மகிழிச்சி அடைந்தனர் . இறைவனே தம் இறுதி கடனை நிறைவேற்றும் பேறு பெற்றமைக்குத் தாம் என்ன தவம் செய்தோமோ என்று நினைத்து ஆறுதல் அடைந்தனர் . மன்னரும் தொடர்ந்து தான தருமங்களை செய்து சுப போகங்களை அனுபவித்து இறைவனடி சேர்ந்தார் .

அவ்வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார் . அங்கிருந்த வன்னியப்பெருமக்கள் அருள்மிகு அண்ணாமலையானை சம்மந்திமுறை ஏற்று தலைக்கட்டு நடத்தியதாகவும் , அதனால் அவ்வன்னியர் வாழ்ந்த ஊருக்கு "சம்மந்தனூர் " என்ற பெயர் வழங்க பெற்றது என்று வல்லாள மகாராஜனின் ஈமச்சண்டகை பற்றிய நூல்கள் சொல்கின்றன .

இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் அது முதல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக நாளன்று சமந்தனூரருகில் உள்ள பள்ளிகொண்டாப்பட்டில் விழா கொண்டாடப்படுகிறது .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.