vanniyar.org

Saturday 18 August 2012

சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்


சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர்



பழனியில் உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக  என்று 'வன்னிய பெருங்குலம்' நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார். 



அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த "லோக குருசாமி" 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்... மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.

இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக  பட்டம் எற்றுருக்கிறார் என்று தெரிகிறது.

இன்றும் திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரம் நகரில் கணிசமான அளவில் வன்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்பாசமுத்திர நகரமன்ற உறுப்பினராக வன்னியர் ஒருவர்  இருந்து வருகிறார்.  

நன்றி : தென்பகுதி பாளையக்காரர்கள் வரலாறு, திரு. நடன. காசிநாதன்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.