vanniyar.org

Friday 21 September 2012

வன்னியர்கள் கௌண்டர் என்பதற்கு மற்றுமொரு சிறிய ஆதாரம்

வன்னிய கவுண்டரும் சித்தாண்டபுரம் செப்பேடும்:

நமது இனம் ஒரு போர்க்குடி என்பதை நீங்கள் அறிவீர்கள்.இன்று உள்ள நமது சமுதாய நிலையும் அறிந்ததே. ஆனால் தமிழரசர் ஆட்சி வீழ்ந்த பிறகும் நமது மக்கள் எத்தகையோராய் இருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு செப்பேட்டினை பற்றி இங்கு கூறுகிறேன்."சித்தாண்டபுரம் செப்பேடு" எனக் குறிப்பிடப்படும் இச் செப்பேட்டைப் பற்றி விரிவாக

Wednesday 5 September 2012

ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகர்




சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்க்கரை சாலையில் மிகவும் ரம்மியமாய் கடற்கரையை பார்த்து கொண்டே செல்லும் வகையில் இருக்கும் ஆயிரம்காணி நிலத்திற்கு சொந்தக்காரர் வன்னியகுல க்ஷத்ரிய சமுதாயத்தில் உதித்த திரு. ஆளவந்தார் நாயகர் அவர்கள்.

வைணவத்தில் ஈடுபாடு கொண்டு பிரம்மச்சரியத்தை கடைபிடித்த இவரின்

இந்திய விடுதலை போராட்ட வீரர்

இந்திய விடுதலை போராட்ட வீரர்  "சர்தார்" அதிகேசவலு நாயக்கர் :






இந்திய தேச விடுதலைக்காக 11 ஆண்டுகள் சிறையில்

சோழர்கள் வன்னியர் என்று முதலில் சொன்னவர் யார் ?

"வரலாற்று புலி"   தி.வை. சதாசிவ பண்டாரத்தார்:




"வரலாற்று புலி" தி. வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தமிழ் வேந்தர்கள் வரலாற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தகுந்த
ஆதாரங்களுடன் தந்திருக்கிறார். சோழ மன்னர்களின் வாரிசுகள் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் இருக்கிறார்கள் என்று கூறியவரும் இவரே. இவரின் நூல்கள் பலரால் பாராட்டபட்டிருகிறது. "பண்டாரத்தார்" பட்டம் கொண்ட வன்னியகுல க்ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவர்.     


வன்னியர் சங்கம் பற்றி சிறிய அனால் புதிய தகவல்

நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 124



வன்னியர் சங்கம் 09-06-1889--ல் துவங்கப்பட்டது
...



சென்னையில் வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ் சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில் அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது



சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம் - தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர் பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு



01-06-1890 சென்னையில் அய்யாசாமி பிள்ளை தலைமை

21-06-1891 சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை

05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில்

ராவ் பகதூர் தனக்கோட்டிமுதலியார் தலைமை



25-01-1893 சென்னையில் பங்களா முதலியார் வீட்டில்

புதுவை சதாசிவவேல் தலைமை

17-061894 ஆற்காடு நவாபு தோட்டம்

17-061895 ஜெயராம வேல் தலைமை

28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை

19-07-1896 ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார் தலைமை

21-06-1897 குருசாமி ராயர் தலைமை

26-06-1898 சென்னையில் தனக்கோட்டிமுதலி பங்களாவில்

தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை



23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில்



1900 இல்லை

1901 இல்லை



1902 ஆவணி மாதம் அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை

03-081903 ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர் தலைமை 
 
இதில் உடையார் ,முதலியார் ,நாயகர் ,நாயக்கர்,பிள்ளை மற்றும்  கண்டர் ஆகிய பட்டங்கள் உடையவர்கள் அனைவரும் நம் இனத்தவரே  ...

நன்றி - திரு .விஸ்வராஜு வழக்கறிஞர்

வன்னிய வரலாறுக்கு எதிராக சில சமுகம் வைக்கும் வாதங்கள்

நம் வன்னிய வரலாறுக்கு எதிராக சில சமுகம் வைக்கும் வாதங்கள் :
௧) சிலை எழுபதில் கருணாகர தொண்டைமான் (இளய பல்லவன் )
இவரை குன்றவர் , பல்லவர் , மலையமான் , வன்னியர் என கம்பர் பாடுகிறார்
இதற்காக அவருக்கு கிடைக்கும் பரிசல் தங்க பல்லக்கு .......
...

இந்த பாடல் எழுதிய காலம் 12அம் நுற்றாண்டு என நினைக்கின்றேன்
இந்த பாடல் கலிங்கத்தை வெற்றி கொண்டதற்காக கம்பர் பாடியது ......
கலிங்கத்தை ராஜேந்திர சோழன் படை தளபதி கருணாகர தொண்டைமான்
வெற்றி பெற்றான் எனும் செய்தியில்  இருந்து இந்த பாடல் பாட  பட்ட பொழுது
ராஜேந்திர சோழன் , அல்லது அவன் வாரிசு இருக்கும் காலத்தில் பாட  பெற்ற பாடல் என்பதை நாம்
அறியலாம் ...................

இந்த பாடல் பிதற்றல் பொய் என்றால் ராஜேந்திர சோழனோ , அவனது வாரிசுகளோ இதை அனுமதித்து இருக்க
மாட்டார்கள் ...........

ஏன் இந்த பாடலை பாடிய  பொழுது மலையமான் என்று இன்று கூறிக்கொள்ளும் சில சமுகம் ஏன் கை கட்டி வேடிக்கை பாத்திருக்க மாட்டார்கள் ......
அக இந்த பாடல் கூறும் உண்மை ............. நம் சமுகமே குன்றவர் , பல்லவர் , மலையமான் என்பதற்கு ஆதரமாக அமைகின்றது ............

௨) சோழனுக்கு மட்டுமே முடி சூடும் உரிமை உள்ள தில்லை இல் 16அம நுற்றாண்டு முதல் 20 அம ஆண்டுகாலம் வரை முடி சூடி கொள்ளும் உரிமை பெற்ற திரு சூரப்ப  சோழனார் ஒரு பண்ணையார் என்பதால் கிடைத்த உரிமை என்றால் .......... 400ஆண்டு காலம் இந்த உரிமை மற்ற
பண்ணையாருக்கோ , சமூகத்திற்கோ கிடைக்காதது ஏன் ?

சோழகனர் சாளுக்கிய சோழர் என்றல். ஆதி  ராஜேந்திர னுடன் நேரடி சோழ சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது என்றால். பிற சமூகத்தவர் எப்படி ராஜா ராஜா சோழனுக்கு உரிமை கோருகின்றனர் ?
நன்றி - திரு .ராஜேஷ் பிள்ளை