vanniyar.org

Friday 17 August 2012

வரலாற்று நோக்கில் வன்னியர்...!

வரலாற்று நோக்கில் வன்னியர்...!:

வரலாற்று நோக்கில் வன்னியர்:  படையாச்சி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற சாதியினர் வன்னியரின் உட்பிரிவுகளாக கூறப்படுகின்றனர்.வன்னியர்கள் பல்லவ வம்சத்தை சேர்ந்த்தவர்கள் என்றும் பரவலாக கருதப்படுகிறது. இந்த கருத்தை உறுதியாக்கும் வகையில் பல‌ சரித்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின்
பல பகுதிகள் வன்னியர்களாலும்,வன்னியச்சிகளாலும் ஆட்சி செய்யப்பட்டது.  தோற்றம்:  வன்னியர் என்ற சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வன்னியர்கள் தென்னிந்தியாவில் பெரும்பாலும் அதிகமாக காணப்படுகின்றனர்.இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.

ஆந்திரா மற்றும் கர்னாடகாவில் இவர்கள் அக்னிவம்சி என்றும் அழைக்கப்படுகின்றனர். சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.
அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.


















அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.






















அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர். இந்த வம்சத்தில் தோன்றிய ருத்ர வன்னிய மாகாராஜா தென்னிந்தியாவை ஆட்சி செய்தான் திருவள்ளுவர் காலத்தை சேர்ந்த கல்லாடம் என்ற நூலில் வன்னி என்ற சொல் அரசன் என்ற பதத்தை குறிக்க பயன்படுத்த் ப்ட்டிருப்பது குறிப்பிட தகுந்த ஒன்றாகும்.
















No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.