vanniyar.org

Friday 17 August 2012

வன்னியர்களுக்கான அரசியலை எந்தப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்?

வன்னியர்களுக்கான அரசியலை எந்தப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்?
-அருள்  ரத்தினம்:   ‎

இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. 

1. வன்னியர்களின் ஆதரவு ஒன்றே போதும்.   

2. மற்ற சாதியினரின் ஆதரவையும் நாம் வென்றெடுக்க வேண்டும். 

இதில் முதலாவதை அழுத்தமாகப் பேசினால் இரண்டாவது பாதிப்படையும். இரண்டாவதை முன்னெடுத்தால் முதலாவதை இழக்க நேரிடலாம் - இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது?  

சாதி அரசியலுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு - கருநாடக மாநிலம். அங்கு பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிக்க சாதியினர் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கின்றனர். ஆனால், வெளிப்படையாக சாதி அரசியல் பேசுவது இல்லை. 
கருநாடக மாநிலத்தின் லிங்காயத், ஒக்கலிக்கர் போன்றோ, ஆந்திராவின் ரெட்டி சமூகம் போன்றோ - தமிழ்நாட்டில் வன்னியர்கள் எல்லாகட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. இத்தனைக்கும் அந்த சமூகங்கள் அந்தந்த மாநில மக்கள்தொகையில் இருக்கும் எண்ணிக்கையைவிட தமிழ்நாட்டில் வன்னியர் மக்கள்தொகை அதிகம். (பா.ம.க தவிர வேறு எந்த கட்சியிலும் வன்னியர் ஆதிக்கம் நடைமுறை சாத்தியமல்ல.) 
இப்போது - வன்னியர் அரசியலை வன்னியர் சங்கத்தின் மூலமாக தனி பாதையிலும், எல்லோருக்குமான அரசியலை பா.ம.க மூலமும் முன்னெடுப்பதுதான் ஒரே வாய்ப்பாக இருக்கக்கூடும்! ஆனால், இதனை எல்லா வன்னியரும் மனதளவில் உணர்ந்து - பா.ம.க'வின் பின் அணிவகுத்தால் மட்டுமே - நம்முடைய வாழ்நாளில் வன்னியர் ஆட்சி சாத்தியமாகும்(வேறு வழி இல்லை ஏனெனில் நமக்கு வேறு வன்னியர் கட்சி இல்லை ). 

கார்த்திக்  சம்பூர்வராயர்  :-   நாம் முதலில் வன்னியர்களின் ஆதரவையும் பிறகு தலித் மக்களின் ஆதரவையும் அப்புறம் இஸ்லாமியர்கள் ஆதரவையும் பெறவேண்டும்... காரணம் மற்றவர்கள் அவ்வளவு எளிதில் பா ம க கட்சியை ஏற்று கொள்ள மாட்டார்கள். இந்த மூன்று சமுதாய மக்களின் வாக்குகளை 100% கிடைத்தாலே பல இடங்களில் வெற்றி பெறலாம். நமது வன்னிய மக்களை பா ம க கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைக்க முதலில் நாம் ஆண்ட பரம்பரை.. நாம் தான் பல்லவ,சேர,சோழ, பாண்டியர் என்பதை நமது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அந்த பணியை பா ம க கட்சி செய்ய முடியாவிட்டாலும் வன்னியர் சங்கம் செய்ய வேண்டும். நாம் யார்..எப்படி வாழ்ந்தோம் என்பது நமது மக்களுக்கு தெரிந்தாலே..நாம் மீண்டும் ஆளவேண்டும் என்ற எண்ணம் வரும்...பிறகு தானாக பா ம க வுக்கு வோட்டு போடுவார்கள்....

அதை விட்டுவிட்டு நம் மக்களை தேவை இல்லாமல் தாழ்வு மனப்பான்மைக்கு செல்ல விடாதீர்கள். உண்மையான நமது வரலாறு நம் மக்களுக்கு மீண்டும் ஆளவேண்டும் என்ற உணர்வினை கொடுக்கும். மாற்றான் வன்னியர் வரலாற்றையும் பட்ட பெயர்களையும் திருடி கொண்டு இருக்கிறான். அதை வேடிக்கை பார்த்து கொண்டு வன்னியர் சங்கம் இருக்குமானால் நமது மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்? "வரலாற்றை இழந்த இனம் வரலாற்றில் அழிந்து போகும்...
நன்றி :அருள்  ரத்தினம் மற்றும் கார்த்திக்  சம்பூர்வராயர் .  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.