vanniyar.org

Friday 17 August 2012

வன்னிய சமூக ஊடகத்தின் தற்போதைய நிலை?

வன்னிய சமூக ஊடகத்தின் தற்போதைய நிலை?:


வன்னிய சமூக ஊடகத்தின் தற்போதைய  நிலை....
-கார்த்தி மணி 
தற்போது வரும்   அணைத்து ஊடகங்களும் பத்திரிகை தர்மத்தை மீறி நடக்கின்றன.  நமது கட்சிக்காக உயிரை கொடுக்கும் தொண்டர்கள் பலபேர் நமது கிராமங்களில் தான் உள்ளனர்....  ஆனால் அவர்களுக்கு நம் கட்சியன் செய்திகள் சரியாக சேர்வதில்லை,, மக்கள் தொலைகாட்சி, தமிழன் தொலைகாட்சி,  தமிழோசை நாளிதழ் போன்ற ஊடகங்களும் நமிடம் உள்ளது... ஆனால் நம் வீடு பெண்களுக்கு தொலைகாட்சி தொடர்கள்  பார்கவே நேரம் சரியாக உள்ளது..
கிராமபுரங்களில் மக்கள் தொலைகாட்சி பார்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.....  எனவே தமிழோசை நாளிதழை நம் கிராமங்களுக்கு கொண்டு சேர்த்திட வேண்டும்..... இது நிச்சயமாக மிக பெரிய  தாக்கத்தையும்  மாற்றதயும்  எற்படுத்தும்.... இந்த யோசனையை கட்சி மேலிடத்திற்கு  யார்  கொண்டு  சேர்ப்பது என்பதே கேள்விகுறி?  
2006ஆம்  ஆண்டு நடந்த ஒரு சம்பவம்,, எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் அவர்கள் நம் கட்சில் இருந்தார்.  சுமார் ஒரு 6 மாத காலம் தமிழோசை நாளிதழை எங்கள் வீடுகளுக்கு இலவசமாக அவர் தலைமையில் விநியோகித்தார்.. 2006 உள்ளாட்சி தேர்தலில் அவருக்கு கட்சி சார்பாக போட்டியட  சந்தர்பம் தரவில்லை.... அவரும் நாளிதழ் விநியோகத்தை நிறுத்தி விட்டார்...  இதை மற்ற கட்சி நிர்வாகிகளும் கண்டுகொள்ளவில்லை.....  முடிந்ததை பேசி பயனில்லை நண்பர்களே....... எங்கள் ஊரில் நடந்த சம்பவம் ஒரு அனுபவத்திற்காக  தங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.... தற்போது ஆகா வேண்டிய காரியங்களை பார்ப்போம்  தமிழோசை நாளிதழை மாவட்டம்தோறும் அணித்து கிராமங்களுக்கும் விநியோகம் செய்ய வழி செய்வோம்.......  நமது வார்டு உறுப்பினர் முதல்........ மாவட்ட செயலாளர் வரை.......  தமிழோசை நாளிதழ்களை காலை  விநியோகபதிலிருந்து அவர்களது கட்சி பணி  தொடங்கட்டும்.......

நன்றி  - திரு .-கார்த்தி மணி .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.