vanniyar.org

Monday 13 August 2012

"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.


"சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே" - திரு. ஆறு. அண்ணல் கண்டர்.

சிவகிரி பாண்டியர்கள் வன்னியகுலத்தினரே என்பதை தனது "தென் தேச யாத்திரை"
என்னும் கட்டுரையில் இனவரைவியலாளர் திரு. ஆறு. அண்ணல் கண்டர் அவர்கள்
தெரிவித்து உள்ளார்.
அவரின் கட்டுரையில் இருந்து சில வரிகள்:
வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி
அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர்.
இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி
காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்றநூல்களும் கைபீதுகளும்
ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின்
பத்திரங்களும் அவர்களை"வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு
ஏன் 23 .05 .2012 அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு
செய்த நாள் 22 .05 .2012 ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக
பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட
"வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.


1925 ஆம் ஆண்டு மைனர் பாண்டியன் என்ற சிவகிரி ஜமீன்தார் காலமானார்.
இதனால் இதே ரத்த உறவை சேர்ந்த கல்வி அறிவு பெறாத வன்னியர் ஒருவரை
உறவினர்கள் சிவகிரி ஜமீனாகநியமித்தார்கள். அவரோ சிங்கம்பட்டி மறவர் ஜமீனை
சேர்ந்த பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.
அரண்மனைக்கு ராணியாக வந்த அந்த மறவர் குல பெண்மணி, தன் வாரிசுகளுக்கு தன்
சமூகத்தில் பெண் எடுக்க ஆரம்பித்தார். தற்போது ராணியாக இருக்கும்
திருமதி. பால குமாரி நா ச்சியார் அவர்கள் சேத்தூர் மறவர் ஜமீனை
சேர்ந்தவர். பெண் எடுத்தது மறவர் சமூகத்தில் என்றாலும் சிவகிரி அரசர்கள்
அனைவரும் வன்னியகுல க்ஷத்ரியர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
சிவகிரி வன்னியர் பாளையத்தின் ஐந்தாம் ஜமீன்தார் மைனர் ராமலிங்க வரகுண
பாண்டிய வன்னியனார்.
சிவகிரி அரசர்கள் "வன்னியகுல க்ஷத்ரியர்கள்" என்று கூறும் அவர்களது
சொத்து பத்திரம்.
இன்றும் சிவகிரியை சுற்றி உள்ள பல கிராமங்களில் சிவகிரி அரச வம்சத்து
வன்னியகுல க்ஷத்ரியர்களை காண முடிகிறது. சிவகிரி ஜமீன்தார் மைனர்
பாண்டியனின் நினைவு நாளின் போது, சிவகிரி அரச வம்சத்தை சேர்ந்த பலர்
வன்னியர் சங்கத்தின் சார்பில்நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.
நன்றி: திரு. ஆறு. அண்ணல்
கண்டர்

மேலும் வன்னியகுல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த பாண்டியர்களின் வாரிசுகளான சிவகிரி அரசர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் ஆட்சி செலுத்தி வந்துள்ளனர். இதற்க்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. திருக்கைவளம், சிவகிரி காதல், சிவகிரி திக்கு விஜயம் போன்ற நூல்களும் கைபீதுகளும் ஆங்கிலேயர்களின் நூல்களும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவகிரி அரசர்களின் பத்திரங்களும் அவர்களை "வன்னியகுல க்ஷத்ரியர்" என்றே கூறு கின்றன. அவ்வளவு ஏன் 23 .05 .2012 அன்று திருமணம் செய்து கொள்ள இருக்கும் (இதை தட்டச்சு செய்த நாள் 22 .05 .2012 ) சிவகிரியின் தற்போதைய ஜமீன்தார் ராஜா வ. சேவுக பாண்டிய சின்ன தம்பியார் என்ற விக்னேஷ் அவர்களின் சாதி சான்றிதழில் கூட "வன்னிய குல க்ஷத்ரியர்" என்று தான் உள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.